spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாலால் சலாம் படத்திற்கு புதிய சிக்கல்... தடை விதிக்கக்கோரி புகார் மனு...

லால் சலாம் படத்திற்கு புதிய சிக்கல்… தடை விதிக்கக்கோரி புகார் மனு…

-

- Advertisement -
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் லால் சலாம் திரைப்படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியிருக்கிறது.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஆவார். தனுஷை வைத்து 3 திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய திரைப்படம் வை ராஜா வை. இதில் கௌதம் கார்த்திக், விவேக், ஆகியோர் நடித்திருந்தனர்.

we-r-hiring
தற்போது இடைவெளிக்கு பிறகு அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம்.இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், லால் சலாம் படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஆணையரிம் சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், லால் சலாம் படத்தில் நடித்துள்ள துணை நடிகை தன்யா பாலகிருஷ்ணா தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியவர். படத்தை வெளியிட்டால் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தெரிவித்துள்ளார். இதனால் லால் சலாம் படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

MUST READ