பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ‘விடுதலை’ படக்குழுவினருடன் காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விடுதலை போராட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இயக்குனர்கள் ராஜீவ் மேனன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இருவரும் சிறப்பாக நடித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் விடுதலை படக்குழுவினருடன் காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஜீவி பிரகாஷ் தோளில் கை போட்டவாறு காணப்படுகிறார்.
வெற்றிமாறனும் அனுராக் காஷ்யபும் தொழில் ரீதியான நல்ல நண்பர்கள் என்பது சினிமா துறையில் அனைவருக்கும் தெரியும். இருவரது படங்கள் வெளியானாலும் பார்த்துவிட்டு இருவரும் பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தற்போது அனுராக் காஷ்யப் ‘விடுதலை’ படத்தை பார்த்திருக்கலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையில் விஜய் சேதுபதி நடிக்கும் 50-வது படமான மகாராஜா படத்தில் அனுராக் காஷ்யப் தான் வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.