- Advertisement -
பீட்சா 3 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வின் கக்குமனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீட்சா 3 தி மம்மி. இது கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான பீட்சா திரைப்படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ளது. இதில் அஸ்வின் உடன் இணைந்து காளி வெங்கட், கௌரவ் நாராயணன், குரேஷி, பவித்ரா, அனுபமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திருக்குமரன் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் ராஜ் இசை அமைத்துள்ளார். திகில் நிறைந்த ஹாரர் திரைப்படமான இப்படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியானது.

தற்போது இப்படம் சிம்ப்ளி சௌத் ஓடிடி தளத்தில் (ஆகஸ்ட் 24) நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.