spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா"நான் அப்படி சொல்லவே இல்ல, குப்பை மாதிரி நியூஸ் போடாதீங்க" கடுப்பான நடிகை ஹன்சிகா

“நான் அப்படி சொல்லவே இல்ல, குப்பை மாதிரி நியூஸ் போடாதீங்க” கடுப்பான நடிகை ஹன்சிகா

-

- Advertisement -

முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவர் தன்னை துன்புறுத்தியதாக வெளியான செய்திகளுக்கு நடிகை ஹன்சிகா பதில் அளித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள ஹன்சிகா தற்போது சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் அதை எடுத்து தன் கணவருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள் திருமணத்தை அடுத்து அவர் புதிய படங்களில் கமிட்டானதாக தெரியவில்லை.

we-r-hiring

இந்நிலையில், ஹன்சிகாவை பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் துன்புறுத்தியதாகவும் அதற்கு ஹன்சிகா தக்க பதிலடி கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாக வந்தன.

அந்த செய்திகளுக்கு தற்போது ஹன்சிகா பதில் அளித்துள்ளார். “இந்த மாதிரி நான் எங்கேயும் சொல்லவில்லை. இந்த மாதிரி குப்பைகளை பதிவிடுவதை நிறுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “ஒரு செய்தியை வெளியிடும் முன் அது உண்மைத்தன்மை ஆராய்ந்து வெளியிடவும் இது மாதிரியான வதந்திகளை வீணாக பரப்ப வேண்டாம் நான் அப்படி சொல்லவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

MUST READ