spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஹ்மான் பாடும் போது நிகழ்ச்சியை நிறுத்த கூறிய காவலர்

ரஹ்மான் பாடும் போது நிகழ்ச்சியை நிறுத்த கூறிய காவலர்

-

- Advertisement -

ஏ.ஆர் ரஹ்மான் பாடி கொண்டு இருக்கும் போதே மேடையேறி நிகழ்ச்சியை நிறுத்த கூறிய காவல்துறை அதிகாரி; “Thanks Everyone” எனக்கூறி உடனே நிகழ்ச்சியை முடித்த ரஹ்மான்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராஜா பகதூர் மில்ஸில், ஆஸ்கர் விருது நாயகன் ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் இயக்குனர் மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான உயிரே திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த “தையா தையா” பாடலை ஏ.ஆர் ரகுமான் பாடி கொண்டிருந்தபோது, திடீரென மேடை ஏறிய காவல்துறை அதிகாரி ஒருவர் தனது கையில் கட்டியிருந்த கடிகாரத்தை காண்பித்து நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தும்படி கூறினார்.

ரஹ்மான் பாடும் போது நிகழ்ச்சியை நிறுத்த கூறிய காவலர்

we-r-hiring

காரணம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியை
இரவு 10 மணி வரை மட்டுமே நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அனுமதி நேரத்தை கடந்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் போலீசார் நிகழ்ச்சியை நிறுத்தியுள்ளனர். இதனை புரிந்து கொண்ட எ.ஆர் ரகுமான் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்களுக்கு நன்றி கூறி நிகழ்ச்சி உடனடியாக முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

MUST READ