எலக்சன் திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ்… மே 17-ம் தேதி ரிலீஸ்…
- Advertisement -
எலக்சன் திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது.

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் குமார். அவரது முதல் படமாக உறியடி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் விஜய்குமார். 2016-ம் ஆண்டு வெளியான உறியடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உறியடி 2-ம் பாகம் வெளியானது. நடிகர் சூர்யா இப்படத்தை தயாரித்து இருந்தார். இரண்டு பாகங்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

இதைத் தொடர்ந்து விஜய் குமார் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் பைட் கிளப். இப்படத்தை பிரபல முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரித்து இருந்தார். தற்போது விஜய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் எலக்சன். இதில் விஜய்குமார் உடன் இணைந்து அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரசியல் பின்னணியில் இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. சேத்துமான் படத்தை இயக்கிய தமிழ் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

ரீல் குட் ஃபிலிம் நிறுவனம் படத்தை தயாரித்து உள்ளது. கோவிந்த் வசந்தா படத்திற்கு இசை அமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில்,தற்போது படத்திற்கு தணிக்கைக் குழு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. மேலும், இத்திரைப்படம் நாளை மறுநாள் மே 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.