அசோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி கூட்டணியில் உருவாகியுள்ள பொன் ஒன்று கண்டேன் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான அசோக்செல்வன் நடிப்பில் கடந்த ஆண்டு போர் தொழில் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து சபாநாயகன், ப்ளூ ஸ்டார் போன்ற படங்களும் அசோக்செல்வனுக்கு வெற்றி படங்களாகவே அமைந்தன. அடுத்ததாக அசோக் செல்வன், போர் தொழில் பட இயக்குனருடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்க இருக்கிறார். மேலும் எமக்குத் தொழில் ரொமான்ஸ் போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் அசோக் செல்வன் பொன் ஒன்று கண்டேன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அசோக் செல்வன் உடன் இணைந்து ராக்கி, ஜெயிலர், அஸ்வின்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான வசந்த் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். இந்த படத்தை பிரியா V இயக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் நேரடியாக ஜியோ சினிமா மற்றும் கலர்ஸ் தமிழில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.