Homeசெய்திகள்சினிமாசூர்யா படத்தில் இணைந்த நட்சத்திரங்கள்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு... சூர்யா படத்தில் இணைந்த நட்சத்திரங்கள்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டிய சூர்யா அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இதனிடையே கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் சூர்யா ஒப்பந்தமாகி இருக்கிறார். ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கு பிறகு இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது சூர்யா நடிக்கும் 44-வது படமாகும். இத்திரைப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

இத்திரைப்படத்தின் நடிகர் நடிகைகள் குறித்த தகவலை படக்குழு அடுத்தடுத்து அறிவித்துள்ளது. அதன்படி, படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், மலையாள பிரபலங்கள் ஜெயராம் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளனர்.

மேலும், பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் கருணாகரனும் இத்திரைப்படத்தில் இணைந்திருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.