Homeசெய்திகள்சினிமாபிரபாஸ் - சந்தீப் ரெட்டி கூட்டணியில் ஸ்பிரிட்... வந்தது சூடான அப்டேட்...

பிரபாஸ் – சந்தீப் ரெட்டி கூட்டணியில் ஸ்பிரிட்… வந்தது சூடான அப்டேட்…

-

பிரபாஸ் மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகும் ஸ்பிரிட் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

டோலிவுட், கோலிவுட், மோலிவுட், பாலிவுட் என அனைத்திந்திய மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாலிவுட் படத்தின் வெற்றிக்கு பிறகு உச்ச நடிகராக உருவெடுத்தார் நடிகர் பிரபாஸ். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சலார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் பிருத்விராஜ், பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சலார் PART 1 CEASE FIRE என்ற பெயரில், கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து கல்கி திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். நாக் அஸ்வின் இப்படத்தை இயக்குகிறார். இதில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க, தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அர்ஜூன் ரெட்டி, அனிமல் திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படம் ஸ்பிரிட். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  இத்திரைப்படத்தில் பிரபாஸ் போலீசாக களமிறங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூன் மாதம் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு தள்ளிப்போனது.

MUST READ