பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
பிரபாஸ் தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதேசமயம் பிரபாஸ் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சலார் படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படத்தை கே ஜி எஃப் 1 மற்றும் கே ஜி எஃப் 2 படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்குகிறார். இது கே ஜி எஃப் படத்தைப் போலவே ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் ஜெகபதி பாபு மற்றும் பல நடிக்கின்றனர். பிரித்திவிராஜ் இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கிறார். சலார் படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
பிரபாஸின் சமீபத்திய திரைப்படங்கள் பெரிதளவும் வெற்றி பெறாத காரணத்தால் பிரபாஸின் சலார் படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அந்த வகையில் இந்த படத்தின் டீசர் கடந்த ஜூன் 6ஆம் தேதி வெளியாகி சமூக வலைதளங்களில் தற்போது வரையிலும் வைரலாகி வருகிறது. இந்த டீசரில் PART 1 CEASEFIRE என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வரையிலும் இந்த டீசர் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டீசர் மூலம் கே ஜி எஃப் படத்திற்கும் சலார் படத்திற்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4வது வாரத்தில் வெளியாகலாம் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.