spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா1000 கோடியை அள்ளிய 'கல்கி 2898AD' ...... இந்திய சினிமாவில் மற்றுமொரு மைல்கல்!

1000 கோடியை அள்ளிய ‘கல்கி 2898AD’ …… இந்திய சினிமாவில் மற்றுமொரு மைல்கல்!

-

- Advertisement -

கல்கி 2898AD திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.1000 கோடியை அள்ளிய 'கல்கி 2898AD' ...இந்திய சினிமாவில் மற்றுமொரு மைல்கல்!சமீப காலமாகவே பான் இந்திய திரைப்படங்கள் பெரியளவு வெளியாகி கலக்கி வருகின்றன. குறிப்பாக பாகுபலி 2 படத்திற்கு பிறகு ஆயிரம் கோடி வசூல் என்பது சாத்தியமாகியுள்ளது. அதன்படி ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப் 2, பதான், ஜவான் போன்ற படங்கள் ஆயிரம் கோடி வசூலை எட்டி சாதனை படைத்தன. தற்போது அந்த வரிசையில் கல்கி 2898 AD திரைப்படமும் இணைந்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன்,தீபிகா படுகோன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான இப்படம் வெளியாகி 17 நாட்களில் இச்சாதனையை படைத்துள்ளது. மகாபாரத கதையைத் தழுவி பிரம்மாண்ட ஹாலிவுட் தரத்திலான காட்சி அமைப்புகளுடன் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களை பெரிதளவும் கவர்ந்தது. விஷுவல்ஸ் மற்றும் VFX காட்சிகளும் மிகச் சிறப்பாக அமைந்திருந்ததால் குடும்பத்துடன் இப்படத்தை காண திரையரங்குகளுக்கு ரசிகர்கள் படையெடுத்து செல்கின்றனர்.

பிரபாஸ் நடிப்பில் வெளியான கடந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இந்த கல்கி திரைப்படம் பிரபாஸுக்கும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ