spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898AD- 2' .... லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898AD- 2’ …. லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

-

- Advertisement -

பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898AD- 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898AD- 2' .... லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

பிரபாஸ் நடிப்பில் தற்போது ‘தி ராஜாசாப்’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் 2025 டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இப்படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வரும் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898AD எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் உலகம் முழுவதும் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.1100 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்தது. பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898AD- 2' .... லேட்டஸ்ட் அப்டேட் என்ன?அடுத்தது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் இந்த படத்தில் இருந்து நடிகை தீபிகா படுகோன் விலகி விட்டதாக இதன் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே தீபிகா படுகோனின் கதாபாத்திரத்தில் வேறு யார் நடிக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் கல்கி 2898AD- 2 தொடர்பான கூடுதல் தகவல் கிடைத்திருக்கிறது. பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898AD- 2' .... லேட்டஸ்ட் அப்டேட் என்ன?கல்கி 2898AD முதல் பாகத்தில் கமல்ஹாசனின் காட்சிகள் குறைவாகவே இடம்பெற்றிருக்கும். ஆனால் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசனின் காட்சிகள் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் இடம்பெற இருக்கிறதாம். மேலும் அடுத்த மாதத்தில் இருந்து கமல்ஹாசன் படப்பிடிப்பில் இணைய உள்ளார் என்று சொல்லப்படுகிறது. நடிகர் பிரபாஸ் 2026 ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்கி 2898AD முதல் பாகமே பயங்கர பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்தது. ஆகையினால் கல்கி 2898AD- 2 அதைவிட பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ