Homeசெய்திகள்சினிமாபிரபாஸின் சலார்.... ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆன் தி வே!

பிரபாஸின் சலார்…. ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆன் தி வே!

-

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் சலார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

பிரபாஸ் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சலார் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை கே ஜி எஃப் ஒன் மற்றும் கேஜிஎப் 2 படங்களை இயக்கிய பிரசாந்து நில் இயக்குகிறார். ரவி பசூர் இதற்கு இசையமைக்கிறார்.

இதில் பிரபாஸுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

சலார் PART 1- CEASEFIRE என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சலார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அதன்படி ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபாஸ் நாக் அஸ்வின் இயக்கத்தில் ப்ராஜெக்ட் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ