- Advertisement -
பிரபல தெலுங்கு நடிகரும், பான் இந்தியா நடிகருமான பிரபாஸூக்கு உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு திரையில் அறிமுகமாகி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் பிரபாஸ். முகமும், பெயரும் தெரியாத அளவுக்கு குறுகிய வட்டத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார் நடிகர் பிரபாஸ். இத்திரைப்படத்தின் வெற்றி நடிகர் பிரபாஸின் மார்க்கெட்டை உயர்த்தியது.
பாகுபலி படத்திற்கு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்த திரைப்படம் சலார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடித்த சலார் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து கல்கி திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார்.