Homeசெய்திகள்சினிமாநட்சத்திர பட்டாளத்தின் கண்ணப்பா... டீசர் அப்டேட் இதோ...

நட்சத்திர பட்டாளத்தின் கண்ணப்பா… டீசர் அப்டேட் இதோ…

-

- Advertisement -
kadalkanni
தெலுங்கில் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் கண்ணப்பா. வரலாற்று பின்னணியில் உருவாகும் இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடிக்கிறார். கண்ணப்பர் என்ற வேடத்தில் விஷ்ணு நடிக்கிறார். இந்து கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகிறது. இதில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஆகியோர் சிவனாக நடிக்கிறார்.

இத்திரைப்படத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்‌ஷய் குமாரும், இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். இதுவே அவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. படத்தில் மோகன்பாபு, பிரபுதேவா, காஜல் அகர்வால் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், கண்ணப்பா திரைப்படத்தின் டீசர் கடந்த 21-ம் தேதியே கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், எதிர்பாராத காரணங்களால் படத்தின் டீசர் வெளியாகவில்லை. இந்நிலையில் வரும் ஜூன் 14-ம் தேதி கண்ணப்பா படத்தின் டீசர் வௌியாகும் என்று படக்குழு போஸ்டருடன் அறிவித்துள்ளது.

MUST READ