பிரபுதேவா நடிப்பில் உருவாகும் முசாசி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
பிரபு தேவா தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் வுல்ஃப், பேட்ட ராப், லைஃப் இஸ் பியூட்டிஃபுல் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் பிரபுதேவா, முசாசி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபுதேவா உடன் இணைந்து வி டிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஷாம் ரோட்ரிக்ஸ் எழுதி, இயக்கியுள்ளார். விக்னேஷ் வாசு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய லீ இசையமைத்துள்ளார். இந்த படம் ஆக்ஷன் திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது டீசரையும் பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த டீசரில் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த டீசர் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் டீசரின் இறுதியில் இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.