spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் சம்பவம் செய்யும் பிரபுதேவா.... 'பேட்ட ராப்' பாடலின் ரீமிக்ஸ் வெர்சன் வெளியானது!

மீண்டும் சம்பவம் செய்யும் பிரபுதேவா…. ‘பேட்ட ராப்’ பாடலின் ரீமிக்ஸ் வெர்சன் வெளியானது!

-

- Advertisement -

பிரபுதேவாவின் பேட்ட ராப் பாடலின் ரீமிக்ஸ் வெர்சன் வெளியாகியுள்ளது.மீண்டும் சம்பவம் செய்யும் பிரபுதேவா.... 'பேட்ட ராப்' பாடலின் ரீமிக்ஸ் வெர்சன் வெளியானது!

நடிகர் பிரபுதேவா கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் பேட்ட ராப் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தினை ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க எஸ் ஜே சினு படத்தினை இயக்கி இருக்கிறார். டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் ஜித்து தாமோதரன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இதில் பிரபுதேவா தவிர வேதிகா, சன்னி லியோன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் திரைக்கு வருவதற்கு முழு வீச்சில் தயாராகி வரும் நிலையில் படத்தின் டீசரும், அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் பேட்ட ராப் பாடலின் ரீமிக்ஸ் வெர்சன் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 1994 ஆம் ஆண்டு பிரபுதேவா, நக்மா, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் வெளியான காதலன் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் தான் பேட்ட ராப். இந்த பாடல் அன்று முதல் இன்று வரை பலரின் ஃபேவரைட்டான குத்து பாடல்களில் ஒன்றாகும்.

we-r-hiring

இந்தப் பாடல் வரியை பிரபுதேவாவின் புதிய படத்திற்கு தலைப்பாக அறிவித்ததற்கு பின்னர் பேட்ட ராப் பாடல் இந்த படத்தில் இல்லாதது ஒரு குறையாக இருந்தது. தற்போது படக்குழு அந்த ஏக்கத்தை தீர்த்துள்ளது. இந்நிலையில்
கிட்டத்தட்ட 29 வருடங்களுக்கு பிறகு இந்தப் பாடலை ரீமிக்ஸ் செய்திருப்பது ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தியுள்ளது. எனவே ரசிகர்கள் இணையத்தில் இந்த ரீமிக்ஸ் வெர்சனை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

MUST READ