Homeசெய்திகள்சினிமாமழையில் குதூகலித்த பிரதீப் ரங்கநாதன்... வீடியோ வைரலான நிலையில் திடீர் நீக்கம்...

மழையில் குதூகலித்த பிரதீப் ரங்கநாதன்… வீடியோ வைரலான நிலையில் திடீர் நீக்கம்…

-

- Advertisement -
kadalkanni
கோலிவுட்டில் ஒரே சமயத்தில் முன்னணி நடிகராகவும், முன்னணி இயக்குநராகவும் வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் அவர் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜெயம்ரவி நடித்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் நகைச்சுவையாக வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வசூலையும் அள்ளியது. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

அடுத்து தான் இயக்கி கதாநாயகனாக நடித்த லவ் டுடே படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். லவ் டுடே படம் கிட்டத்தட்ட 90 கோடி ரூபாயை வசூலித்தது. இதனால் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் சற்று அதிகமாகவே இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு எல்ஐசி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு டிராகன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மழையில் நனைந்தபடி இளையராஜா இசையை ரசிக்கும் பிரதீப் ரங்கநாதனின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.ஆனால் திடீரென இந்த வீடியோவை சமூக வலைதளத்திலிருந்து நீக்கியுள்ளனர். வீடியோவில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியது காரணமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

MUST READ