spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிறந்த இயக்குனர் அவர் தான்.... மமிதா பைஜு என் இதயத்தில இருக்காங்க.... 'டியூட்' பட விழாவில்...

சிறந்த இயக்குனர் அவர் தான்…. மமிதா பைஜு என் இதயத்தில இருக்காங்க…. ‘டியூட்’ பட விழாவில் பிரதீப்!

-

- Advertisement -

டியூட் பட விழாவில் பிரதீப் ரங்கநாதன் கலகலப்பாக பேசியுள்ளார்.சிறந்த இயக்குனர் அவர் தான்.... மமிதா பைஜு என் இதயத்தில இருக்காங்க.... 'டியூட்' பட விழாவில் பிரதீப்!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே, டிராகன் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கும் டியூட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான டிரைலரும் ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ‘டியூட்’ பட விழாவில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

we-r-hiring

அப்போது செய்தியாளர்களில் ஒருவர், பிரதீப் ரங்கநாதனிடம் “லவ் டுடே – பிரதீப் ரங்கநாதன், டிராகன்- அஸ்வத் மாரிமுத்து, டியூட் – கீர்த்திஸ்வரன், எல்ஐகே – விக்னேஷ் சிவன் இவர்களில் யார் சிறந்த இயக்குனர்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பிரதீப் ரங்கநாதன், “பிரதீப் ரங்கநாதன் தான் சிறந்த இயக்குனர். எனக்கு முதலில் என்னை பிடிக்கும்” என்று கலகலப்பாக பதில் அளித்தார்.

அடுத்தது பிரதீப் ரங்கநாதன், “யாரோ மமிதா பைஜு எங்கே என்று கேட்டார்கள். மமிதா பைஜு இங்கே இருக்கிறார்” என்று சிரித்தபடி தன்னுடைய இதயத்தை காட்டினார். அதன் பிறகு, “அவர் சூர்யா சார் பட ஷூட்டிங்கில் இருக்கிறார். நாளை ப்ரோமோஷனில் கலந்து கொள்வார்” என்று தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ