பிரதீப் ரங்கநாதன், பிரபாஸ் படத்தின் டைட்டிலை கூறியுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி ‘டியூட்’ திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் கீர்த்திஸ்வரனின் இயக்கத்திலும் வெளியான இந்த படம் முதல் 5 நாட்களில் ரூ.95 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இளைஞர்கள் இப்படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதீப் ரங்கநாதன், பிரபாஸின் புதிய பட டைட்டிலை வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதாவது பிரபாஸ் தற்போது ‘தி ராஜாசாப்’ படத்தை கைவசம் வைத்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் பிரபாஸ், ‘சீதாராமம்’ படத்தின் இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்தது நாளை (அக்டோபர் 23) இந்த படத்தின் டைட்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#PradeepRanganathan Leaked #PrabhasHanu Flim Tittle FauZi 🤯💥
Official Tittle Poster Tomorrow..🔥#Prabhas #Imanvi #Fauzi #Fauji pic.twitter.com/iN9C0ytQiV
— Cinema Star 🌟 (@CinemaStar_) October 22, 2025
ஆனால் அதற்கு முன்பாகவே பிரதீப் ரங்கநாதன் இப்படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார். அதன்படி இந்த படத்திற்கு Fauzi என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


