Homeசெய்திகள்சினிமாஇந்தியில் ரீமேக் செய்யப்படும் லவ் டுடே... பூஜையுடன் இன்று படப்பிடிப்பு தொடக்கம்... இந்தியில் ரீமேக் செய்யப்படும் லவ் டுடே… பூஜையுடன் இன்று படப்பிடிப்பு தொடக்கம்…
இந்தியில் ரீமேக் செய்யப்படும் லவ் டுடே திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்குகிறது.
பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயனாக நடித்து வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’. சத்யராஜ், ராதிகா, இவானா, யோகிபாபு, ரவீனா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கலகலப்பான காதல் திரைப்படமான இந்தப் படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இளைஞர்கள் மத்தியில் இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது.
மேலும் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் 50 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பாலிவுட்டின் டாப் நடிகர்களின் வாரிசு இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அதன்படி, லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல நடிகர் அமீர் கானின் மகன் ஜுனைட் கான் கதாநாயகனாகவும், மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் பூஜையுடன் தொடங்கி உள்ளது.