பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதாவது இவர் ‘லவ் டுடே’ எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்த நிலையில் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதன் பின்னர் இவருடைய நடிப்பில் வெளியான டிராகன், டியூட் ஆகிய படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் தொடர்பான அப்டேட் வெளிவந்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் ‘லவ் டுடே’ படத்திற்குப் பிறகு புதிய படம் ஒன்றை தானே இயக்கி நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது.
தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படமானது இளைஞர்களை கவரும் கலகலப்பான பொழுதுபோக்கு படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தொடர்பான விவரங்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.


