பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
ஆரம்பத்தில் இயக்குனராக திரைத்துறையில் நுழைந்த பிரதீப் ரங்கநாதன் தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் எல்ஐகே எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். அதேசமயம் ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. லியோன் ஜேம்ஸ் இதற்கு இசையமைத்துள்ளார். நிகித் பொம்மி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். பிரதீப் ராகவ் இதன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் பஸ் ஒன்றின் மேல் லோக்கலான லுக்கில் லுங்கி கட்டிக்கொண்டு அமர்ந்து தம் அடித்துக் கொண்டிருக்கிறார் பிரதீப். மேலும் அந்த பஸ்ஸில் வொர்ஸ்ட் ஸ்டூடண்ட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தது இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும் மற்ற இரண்டு போஸ்டர்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.