பிரதீப் ரங்கநாதன், கடந்த 2019ல் ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற அடுத்தபடியாக லவ் டுடே எனும் படத்தை தானே இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்த படம் பிரதீப் ரங்கநாதனுக்கு இந்திய அளவில் நல்ல பெயரை பெற்று தந்து புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல்ஐசி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, கிரித்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன், ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் மேலும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் பிரதீப். அதன்படி இவர் நடிக்க உள்ள புதிய படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தை சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தி ஈஸ்வரன் என்பவர் இயக்கப் போவதாகவும் இதன் படப்பிடிப்பு 2024 செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.