Homeசெய்திகள்சினிமாசித் ஸ்ரீராம் குரலில் 'டிராகன்' படத்திலிருந்து 'வழித்துணையே' பாடல் வெளியீடு!

சித் ஸ்ரீராம் குரலில் ‘டிராகன்’ படத்திலிருந்து ‘வழித்துணையே’ பாடல் வெளியீடு!

-

- Advertisement -

டிராகன் படத்திலிருந்து ‘வழித்துணையே’ பாடல் வெளியாகி உள்ளது.சித் ஸ்ரீராம் குரலில் 'டிராகன்' படத்திலிருந்து 'வழித்துணையே' பாடல் வெளியீடு!

தமிழ் சினிமாவில் கோமாளி, லவ் டுடே ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் தற்போது டிராகன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயது லோகர், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நிகேத் பொம்மி இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவரந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து முதல் பாடலும் வெளியாகியிருந்த நிலையில் தற்போது வழித்துணையே எனும் இரண்டாவது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை சித் ஸ்ரீராம், சஞ்சனா ஆகியோர் இணைந்து பாடி இருக்கும் நிலையில் விக்னேஷ் சிவன், கோ சேஷா ஆகியோர் இணைந்து பாடல் வரிகளை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ