Homeசெய்திகள்சினிமாகாதலர் தினத்தன்று திரைக்கு வரும் பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

காதலர் தினத்தன்று திரைக்கு வரும் பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

பிரதிப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.காதலர் தினத்தன்று திரைக்கு வரும் பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன் கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான லவ் டுடே திரைப்படம் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதன் பின்னர் பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே திரைப்படத்தில் நடிக்கிறார். மேலும் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இதற்கிடையில் இவர் ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். காதலர் தினத்தன்று திரைக்கு வரும் பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அதேசமயம் இந்த படத்தில் இருந்து முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே வெளியான தகவலின் படி டிராகன் திரைப்படம் 2025 பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ