பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.இந்தி மொழியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் அந்தாதுன் எனும் க்ரைம் திரில்லர் திரைப்படம் வெளியானது. சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்த படம் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. அதன்படி அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படமானது தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
தமிழில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்திற்கு அந்தகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் தியாகராஜன் இயக்கியிருக்கும் நிலையில் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் இவருடன் இணைந்து சமுத்திரகனி, சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார், கே எஸ் ரவிக்குமார் மனோபாலா என பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். ஸ்டார் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் இந்த படம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது.
அதைத்தொடர்ந்து பலமுறை இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும் தீபாவளி, பொங்கல் என ஒவ்வொரு பண்டிகையின் போதும் படம் தொடர்பான போஸ்டர்கள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. ஆனால் படமானது ரிலீஸ் செய்யப்படவில்லை. இந்நிலையில் நீண்ட நாள் காத்திருப்பது முடிவுக்கு வந்தது போல் அந்தகன் திரைப்படமானது வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.