Homeசெய்திகள்சினிமாபிரேம்ஜியின் 'வல்லமை' பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரேம்ஜியின் ‘வல்லமை’ பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

பிரேம்ஜியின் வல்லமை பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிரேம்ஜியின் 'வல்லமை' பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!தமிழ் சினிமாவில் நடிகர் பிரேம்ஜி, தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028, கோவா, மங்காத்தா ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதன்படி அஜித், கார்த்தி, ஆர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதே சமயம் இவர் சத்திய சோதனை எனும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து வல்லமை எனும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார் பிரேம்ஜி. கருப்பையா முருகன் இந்த படத்தை எழுதி, இயக்கி, தயாரித்திருந்தார். சூரஜ் நல்லுசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஜிகேவி இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பிரேம்ஜி உடன் இணைந்து திவ்யதர்ஷினி, தீபா ஷங்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதில் பிரேம்ஜி காது கேளாதவராக நடித்திருந்தார். பிரேம்ஜியின் 'வல்லமை' பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!முழுக்க முழுக்க சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதாவது இந்த படமானது தந்தைக்கும் – மகளுக்கும் இடையிலான உறவை மையமாக வைத்து எமோஷனல் கலந்த கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வருகின்ற மே 23ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ