spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரேம்ஜியின் ஹீரோ அவதாரம்...... நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியான ட்ரெய்லர்!

பிரேம்ஜியின் ஹீரோ அவதாரம்…… நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியான ட்ரெய்லர்!

-

- Advertisement -

பிரேம்ஜி நடிப்பில் உருவாகியுள்ள சத்திய சோதனை திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரேம்ஜி தற்போது சத்திய சோதனை எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து ரேஷ்மா பசுபுலட்டி, ஸ்வயம் சித்தா, கே ஜி மோகன், செல்வ முருகன், ஹரிதா, லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு விதார்த் நடிப்பில் வெளியான ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் படத்தை சமீர் பரத் ராம் தயாரித்துள்ளார். ஆர் வி சரண் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் ரகுராம் இசையமைத்துள்ளார்.

we-r-hiring

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காலகட்டத்திலேயே முடிவடைந்த நிலையில், ஒரு சில காரணங்களால் படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.அதேசமயம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சில மாதங்களுக்கு முன்பான டீசர் உள்ளிட்டவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

சமீபத்தில் சத்திய சோதனை திரைப்படம் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்ட அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரின் மூலம் சத்திய சோதனை திரைப்படம் கலகலப்பான காமெடி படம் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது ஒரு கிராமத்தில் நடக்கும் கொலையை சுற்றி நிகழும் கதை என காட்டுகிறது.

MUST READ