spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரித்விராஜ் நடிக்கும் 'குருவாயூர் அம்பள நடையில்'...... ரிலீஸ் குறித்த அப்டேட்!

பிரித்விராஜ் நடிக்கும் ‘குருவாயூர் அம்பள நடையில்’…… ரிலீஸ் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

பிரித்விராஜ் நடிக்கும் 'குருவாயூர் அம்பள நடையில்'...... ரிலீஸ் குறித்த அப்டேட்!மலையாள சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் பிரித்விராஜ், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழிலும் சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேசமயம் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஆடு ஜீவிதம் திரைப்படம் 2024 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் பிரித்விராஜ், குருவாயூர் அம்பள நடையில் எனும் படத்திலும் நடிக்கிறார். விபின் தாஸ் இயக்கம் இந்த படத்தில் பசில் ஜோசப், யோகி பாபு நிகிலா விமல், அனஸ்வரா ராஜன், ரேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு நீரஜ் ரெவி ஒளிப்பதிவு செய்துள்ளார். அங்கித் மேனன் இசை அமைத்துள்ளார். பிரித்விராஜ் நடிக்கும் 'குருவாயூர் அம்பள நடையில்'...... ரிலீஸ் குறித்த அப்டேட்!சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் 2024 மே மாதத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

மேலும் பிரித்விராஜ் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் எம்புரான் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ