மலையாள சினிமாவில் பரவலை எழுத்தாளரான பென்யமின் எழுதிய தி கோட் லைஃப் என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்ட படம் ஆடு ஜீவிதம். இந்த படத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ், கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக அமலாபால் நடித்திருந்தார். விஷுவல் ரொமான்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தை பிளஸ்ஸி இயக்கியிருந்தார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் (நேற்று) மார்ச் 28 அன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்புகள் உடன் வெளியான இந்தப் படம் கேரள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்காக பிரித்விராஜ் ஆறு வருடங்களாக கடினமாக உழைத்து தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஏ ஆர் ரகுமானின் இசை அனைவரையும் உருக வைத்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ஆடு ஜீவிதம் திரைப்படம் முதல் நாளில் 7.50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கேரளாவில் மட்டுமே 6 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் இனி வரும் நாட்களிலும் இந்த படம் அதிக வசூலை பெற்று தரும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -