பிரித்விராஜின் விலாயத் புத்தா பட டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலையாள சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவர் இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் கடைசியாக ‘எம்புரான்’ திரைப்படம் வெளியானது. இது தவிர ராஜமௌலி – மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்கிறார். இன்னும் சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளார் பிரித்விராஜ். இதற்கிடையில் இவர், ‘விலாயத் புத்தா’ எனும் படத்தில் நடித்துள்ளார். இதனை ஜெயன் நம்பியார் இயக்கியுள்ளார். சந்தீப் சேனன், ஏவி அனுப் ஆகியோர் இதனை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இதற்கு இசையமைத்துள்ளார். அரவிந்த் எஸ். காஷ்யப் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படமானது ஜி.ஆர். இந்து கோபன் எழுதி இருக்கும் விலாயத் புத்தா என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த டீசரை பார்க்கும்போது இந்த படம் ‘புஷ்பா’ படத்தை போல் சந்தன மரக்கட்டையை மையமாக வைத்து உருவாகி இருப்பது போல் தெரிகிறது. மேலும் இந்த டீசரில் குட்டி வீரப்பன், லோக்கல் புஷ்பா போன்ற வசனங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்து, இந்த டீசரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.