Homeசெய்திகள்சினிமாரூ.358 கோடியில் வைர நெக்லஸ்... ரசிகர்களை வாய் பிளக்க வைத்த பிரியங்கா சோப்ரா...

ரூ.358 கோடியில் வைர நெக்லஸ்… ரசிகர்களை வாய் பிளக்க வைத்த பிரியங்கா சோப்ரா…

-

மாடல் அழகியாக இருந்த பிரியங்கா சோப்ரா, உலக அழகி போட்டியில் வென்று பட்டம் வென்றவர் ஆவார். இதைத் தொடர்ந்து விஜய் நடித்த தமிழன் படத்தில் நாயகியாக நடித்த அவர் கோலிவுட்டில் அறிமுகமானார். இதன் பிறகு பாலிவுட் பக்கம் சென்ற பிரியங்கா சோப்ரா, அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்தார். அனைத்து முன்னணி பாலிவுட் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அவரது திரைப்படங்கள் அனைத்தும் வரவேற்பை பெற்று வசூலை குவித்ததை அடுத்து குறுகிய நாட்களிலேயே அவர் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக உச்சம் தொட்ட பிரியங்கா சோப்ரா, பிரபல ஆங்கிலப் பாடகர் நிக்ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆன பிரியங்கா தொடர்ந்து ஆங்கிலத் தொடர்களிலும், ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் நடித்தார். தற்போது ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், ரோமானிய பெரிய நகை கடையான பல்கேரியின் 140-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பெரும் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் கடையின் உலகளாவிய தூதராக நியமிக்கப்பட்ட பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டார். விழாவில் அவர் அணிந்து வந்திருந்த வைர நெக்லஸ் பேசு பொருளாகி உள்ளது. 140 கேரட் வைர நெக்சலஸின் விலை சுமார் 358 கோடி ரூபாயாம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் வாய் அடைத்து போயுள்ளனர்.

MUST READ