- Advertisement -
40 வயதை எட்டியிருக்கும் பிரபல நடிகை மீரா சோப்ராவுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.

தமிழில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான அன்பே ஆருயிரே திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் மீரா சோப்ரா. இவர் சினிமாவில் நிலா என்று அழைக்கப்பட்டார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் தமிழில் அடுத்தடுத்து மருதமலை மற்றும் லீ படங்களில் நடித்தார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார் நடிகை மீரா சோப்ரா. இதன் பிறகு தமிழில் இடைவெளி எடுத்துக் கொண்ட அவர், இதுவரை தமிழ் படங்களில் நடிக்கவில்லை.


கோலிவுட்டை காட்டிலும் பாலிவுட் திரையுலகில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். பிரபல பாலிவுட் நடிகைககள் பிரியங்கா சோப்ரா மற்றும் பரினிதி சோப்ரா ஆகிய இருவரும் மீரா சோப்ராவின் சகோதரிகள். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்ட நிலையில், மீரா சோப்ராவின் திருமணம் குறித்து தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன. இதைத் தொடர்ந்து தற்போது மீரா சோப்ரா திருமண செய்தியை வெளிப்படுத்தி உள்ளார்.



