‘ஓஜி’ பட பிரஸ் மீட்டில் நடிகை பிரியங்கா மோகன் கோபமடைந்துள்ளார்.
நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதை தொடர்ந்து இவர் டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர், பிரதர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதை தவிர தெலுங்கு மொழியிலும் கவனம் செலுத்தி வருகிறார் பிரியங்கா மோகன். அந்த வகையில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓஜி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 25ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மேலும் சமீபத்தில் இந்த படம் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பிரியங்கா மோகனிடம் பத்திரிகையாளர்கள், உங்களுக்கு நடிப்பு வரவில்லை, டான்ஸ் ஆட வரவில்லை என்று மீம்ஸ் வெளிவருகிறது. அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பிரியங்கா மோகன், “என்னை பிடிக்காதவர்கள் சில பேர் காசு கொடுத்து மீம்ஸ் கிரியேட் பண்ண சொல்கிறார்கள். அவர்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை. அதனால் யார் மீம்ஸ் போட்டால் எனக்கென்ன” என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.