spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபுதிய வெப் சீரிஸில் நடிக்கும் பிரியங்கா மோகன்!

புதிய வெப் சீரிஸில் நடிக்கும் பிரியங்கா மோகன்!

-

- Advertisement -

நடிகை பிரியங்கா மோகன் புதிய வெப் சீரிஸில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.புதிய வெப் சீரிஸில் நடிக்கும் பிரியங்கா மோகன்!நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் வலம் வரும் இளம் நடிகைகளில் ஒருவராவார். இவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். இவர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதேசமயம் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த வகையில் தனுஷ், சூர்யா, ரவி மோகன் நானி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மேலும் கடந்த பிப்ரவரி மாதம் தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பேரோ பாடலுக்கு நடனமாடி இருந்தார். இது தவிர ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் பென்ஸ் படத்தில் இவர் கமிட்டாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. புதிய வெப் சீரிஸில் நடிக்கும் பிரியங்கா மோகன்!இந்நிலையில் தான் பிரியங்கா மோகன் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரியங்கா மோகன், நெட்பிளிக்ஸ் தளத்திற்காக புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கிறாராம். இது தொடர்பான படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த வெப் சீரிஸ், கதாநாயகியை மையமாக வைத்து உருவாகிறதா? இதில் வேறு எந்த நடிகர்கள் நடிக்கிறார்கள்? இயக்குனர் யார்? என்பது போன்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ