தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷை தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அறிவர். இவர் பல பெரிய படங்களை தயாரித்து பெயர் பெற்றவர். அந்த வகையில் தற்போது சுந்தர்.சி, நயன்தாரா கூட்டணியில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார். இது தவிர ரஜினி நடிப்பில் புதிய படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ஐசரி கணேஷுக்கு பிரீத்தா, குஷ்மிதா என இரு மகள்களும், சர்வேஷ் என்ற மகனும் இருக்கிறார். அதில் வேல்ஸ் யுனிவர்சிட்டியின் வைஸ் பிரின்சிபிலாக இருக்கும் பிரீத்தாவிற்கு இன்று (மே 9) நடைபெறுகிறது. இந்த திருமண நிகழ்ச்சி ஆர்கே மஹாலில் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து நடைபெறும் திருமண வரவேற்பிற்காக சென்னை ஈசிஆரிலுள்ள பிரார்த்தனா தியேட்டரில் ரூ.30 கோடியில் செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்கு 10 ஆயிரத்திற்கும் மேலானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதன்படி நேற்று (மே 8) இந்த திருமணத்தை முன்னிட்டு சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு நடிகர் சூர்யா வருகை தந்திருந்தார்.
தற்போது திருமணத்திற்கு மணிரத்னம், சுகாசினி, பிரபு, விக்ரம் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன், அதிதி சங்கர், ரவி மோகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.