Homeசெய்திகள்சினிமாஇணையத்தில் கசிந்த 'புஷ்பா 2' ராஷ்மிகாவின் தோற்றம்!

இணையத்தில் கசிந்த ‘புஷ்பா 2’ ராஷ்மிகாவின் தோற்றம்!

-

பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளியான படம் புஷ்பா. புஷ்பா தி ரைஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இணையத்தில் கசிந்த 'புஷ்பா 2' ராஷ்மிகாவின் தோற்றம்!மேலும் பகத் பாஸில், ஜெகதீஷ், சுனில் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பற்றி இந்திய அளவில் பிரபலமானது. அதேசமயம் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. இந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுகுமார், புஷ்பா 2 திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். இணையத்தில் கசிந்த 'புஷ்பா 2' ராஷ்மிகாவின் தோற்றம்!புஷ்பா தி ரூல் என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா, பகத் பாசில் என் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் புஷ்பா 2 படமானது 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் தோற்றம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இணையத்தில் கசிந்த 'புஷ்பா 2' ராஷ்மிகாவின் தோற்றம்!இந்த புகைப்படத்தில் ராஷ்மிகா சிகப்பு நிற புடவையுடன் நகைகளை அணிந்துள்ளார். புஷ்பா 2 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தினால் புஷ்பா 2 படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

MUST READ