Homeசெய்திகள்சினிமாமீண்டும் தள்ளிப்போகும் 'ராயன்' ஆடியோ லான்ச்.... காரணம் என்ன?

மீண்டும் தள்ளிப்போகும் ‘ராயன்’ ஆடியோ லான்ச்…. காரணம் என்ன?

-

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மீண்டும் தள்ளிப்போகும் 'ராயன்' ஆடியோ லான்ச்.... காரணம் என்ன?தனுஷின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை தனுஷ் தான் இயக்கியிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார். இதில் தனுஷுடன் இணைந்து சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் வட சென்னையை மையமாக வைத்து கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. மீண்டும் தள்ளிப்போகும் 'ராயன்' ஆடியோ லான்ச்.... காரணம் என்ன?ஏற்கனவே இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியான நிலையில் படத்தின் முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தை 2024 ஏப்ரல் மாதத்திலேயே வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே போகிறது. அடுத்ததாக படமானது ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என்று சொல்ல ப்பட்டு இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவும் அதே தேதியில் நடைபெற இருப்பதால் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் ராயன் பட இசை வெளியீட்டு விழா ஜூன் 2ஆம் தேதி சென்னை ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. மீண்டும் தள்ளிப்போகும் 'ராயன்' ஆடியோ லான்ச்.... காரணம் என்ன?ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், மீண்டும் இதன் இசை வெளியீட்டு விழா தள்ளிப்போகும் என்று புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் படத்தில் ஏ ஆர் ரகுமான், ரீ ரெகார்டிங் பணிகளை செய்து வருவதால் இதன் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போகும் எனவும் அதன் காரணமாகவே ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் ஒத்திவைக்கப்பட இருக்கிறது என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ