spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிருமணம் வரை சென்ற தீவிர காதல்..... விஜயகாந்த் மறைவிற்கு ராதிகாவின் உருக்கமான பதிவு!

திருமணம் வரை சென்ற தீவிர காதல்….. விஜயகாந்த் மறைவிற்கு ராதிகாவின் உருக்கமான பதிவு!

-

- Advertisement -

திருமணம் வரை சென்ற தீவிர காதல்..... விஜயகாந்த் மறைவிற்கு ராதிகாவின் உருக்கமான பதிவு!நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இவரின் இழப்பு தமிழக மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில் அனைவரும் மீள முடியாத துயரத்தில் உள்ளனர். சினிமா, அரசியலை தாண்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கேப்டன் விஜயகாந்த். தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் இவரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது. நேற்று மாலை விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று வரையிலும் அவர் இறந்த செய்தி நம்ப முடியாத கடினமான உண்மையாக இருக்கிறது. விஜயகாந்தின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் திரைப்பட பிரபலங்களும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ராதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.திருமணம் வரை சென்ற தீவிர காதல்..... விஜயகாந்த் மறைவிற்கு ராதிகாவின் உருக்கமான பதிவு!

we-r-hiring

1980 கால கட்டங்களில் விஜயகாந்த் உடன் இணைந்து ராதிகா பல படங்களில் நடித்துள்ளார். நீதியின் மறுபக்கம், நானே ராஜா நானே மந்திரி, தென்பாண்டி சீமையிலே, பூந்தோட்ட காவல்காரன் என கிட்டத்தட்ட 15 படங்கள் வரை விஜயகாந்த் ராதிகாவும் இணைந்து நடித்துள்ளனர். அந்த சமயங்களில் விஜயகாந்த், ராதிகா ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகவும், அதைத்தொடர்ந்து திருமணம் வரை சென்ற இவர்களின் காதல் ஒரு சில காரணங்களால் நின்றதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஆரம்பத்தில் ராதிகா தான் விஜயகாந்த்தை துரத்தி துரத்தி காதல் செய்தார் என்றும் திருமணம் நின்ற பிறகு ராதிகா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் எனவும் பல செய்திகள் ஏற்கனவே பரவி வந்தது.

இந்நிலையில் விஜயகாந்தின் மறைவிற்கு நடிகை ராதிகா தனது சமூக வலைதள பக்கத்தில், “ஏழை எளிய மக்களின் நீங்கா இடம் பிடித்தவர் தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் விஜயகாந்த்” என்று அவருக்கு புகழாரம் சூட்டி, உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் விஜயகாந்துடன் நெருங்கி பழகும் நண்பர்கள் பலர் விஜயகாந்தை செல்லமாக விஜய் என்று அழைப்பது போன்று தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ