ராதிகா நடிக்கும் தாய் கிழவி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘தாய் கிழவி’ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. Passion Studios இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, சமூக வலைதளங்களில் பரவலான கவனத்தை பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகை ராதிகா, இதுவரை அவர் நடித்த அம்மா கதாபாத்திரங்களைக் கூட தாண்டி, முற்றிலும் மாறுபட்ட வயதான தாய்கிழவி வேடத்தில் தோன்றியுள்ளார். டீசரில் ராதிகாவின் உருமாறிய தோற்றம் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.

‘தாய் கிழவி’ படத்தின் இசையை நிவாஸ் கே. பிரசன்னா அமைத்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் (SK Productions) மற்றும் Passion Studios இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசரை சிவகார்த்திகேயன் தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதில் ராதிகா ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக, வயதான கதாபாத்திரத்தில் அவர் எடுத்துள்ள துணிச்சலான முயற்சி தமிழ் சினிமாவில் தனித்துவமானதாக பேசப்படுகிறது.
படக்குழுவினர் அறிவிப்பின்படி, ‘தாய் கிழவி’ திரைப்படம் 2026 பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. டீசருக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.


