Homeசெய்திகள்சினிமாராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2...... ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2…… ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்!

-

சந்திரமுகி 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தை இயக்குனர் பி வாசு இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இன்றைய வரையிலும் கூட டிவியில் இந்த படம் ஒளிபரப்பானால் பலரும் குடும்பத்துடன் இப்படத்தை பார்த்து ரசிப்பதுண்டு.அந்த அளவிற்கு இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 17 ஆண்டுகள் கழித்து சந்திரமுகி இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதனையும் பி. வாசு இயக்கியுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், வடிவேலு, லட்சுமிமேனன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு எம் எம் கீரவாணி இசை அமைத்துள்ளார் ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மும்பை,மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரம்மாண்டமான அரண்மனையில் இந்த படத்தின் படப் படிப்புகள் படமாக்கப்பட்டு சமீபத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை ராகவாலாரன்ஸ் தொடங்கி இருந்தார். எனவே இத்திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு திரைக்கு வருவதற்கு முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் சந்திரமுகி 2 திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ