தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ராகவா லாரன்ஸ் தற்போது கால பைரவா, ஹண்டர், பென்ஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் காஞ்சனா 4 திரைப்படத்தை தானே தயாரித்து, இயக்கி நடித்தும் வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4 படத்திற்கு பிரேக் விடப்போகிறார் எனவும், அதைத்தொடர்ந்து பென்ஸ் படப்பிடிப்பில் இணைய உள்ளார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
அதாவது பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கம் திரைப்படம் தான் பென்ஸ். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இந்த படம் லோகேஷ் கனகராஜ் எல்சியு- வில் இணைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்றும் பகத் பாஸில், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகி வந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில்தான் பென்ஸ் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மே 9ஆம் தேதி தொடங்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.