Homeசெய்திகள்சினிமாராகவா லாரன்ஸ், எல்வின் நடிக்கும் 'புல்லட்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ராகவா லாரன்ஸ், எல்வின் நடிக்கும் ‘புல்லட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

-

- Advertisement -

ராகவா லாரன்ஸ், எல்வின் நடிக்கும் புல்லட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.ராகவா லாரன்ஸ், எல்வின் நடிக்கும் 'புல்லட்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ராகவா லாரன்ஸ் தற்போது பென்ஸ், கால பைரவா, ஹண்டர் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதே சமயம் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகும் படை தலைவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். மேலும் தனது தம்பி எல்வின் ஹீரோவாக நடிக்கும் புல்லட் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து சுனில், சென்ட்ராயன், கே பி ஒய் வினோத், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான டைரி படத்தை இயக்கிய இன்னசி பாண்டியன் இயக்குகிறார். இதனை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படத்திலிருந்து போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. ராகவா லாரன்ஸ், எல்வின் நடிக்கும் 'புல்லட்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!இந்நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இனிவரும் நாட்களை இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படமானது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ