நடிகர் ராகவா லாரன்ஸ், அஜித் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், நடன இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டிருக்கிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் காஞ்சனா 4 திரைப்படம் உருவாகிறது. அதேசமயம் இவர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர கால பைரவா, ஹண்டர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் ராகவா லாரன்ஸ். இதற்கிடையில் மாற்றம் என்ற அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்நிலையில் இவர், நடிகர் அஜித் குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர், “அஜித் சாருக்கும் எனக்கும் பெரிய நட்பு எல்லாம் இல்லை. ஆனால் அமர்க்களம் படம் பண்ணும் போது ‘மகா கணபதி’ பாடலின் முழு பாடலுக்குமே அவர் நடனமாடி இருக்கலாம். அப்பொழுதே அவர் பெரிய ஹீரோவாக இருந்தார்.
சரண் சார், நான் அந்த பாட்டில் ஆடுகிறேன் என்று கூறியதற்கு பிறகு அஜித் சார் நினைத்திருந்தால் அவரும் அந்தப் பாட்டில் ஆடியிருக்கலாம். ஆனால் என்னுடைய நடனத்தை பார்த்துவிட்டு அந்த தம்பி நல்லா நடனம் ஆடுகிறார். அவரே ஆடட்டும் என்று சொல்லிவிட்டார். மகா கணபதி பாடல் இல்லை என்றால் நான் திரையில் வந்திருக்க மாட்டேன். இப்பொழுது ஒரு நடிகராக உட்கார்ந்து இருக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

அஜித் நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. தற்போது கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வரும் அஜித், 2025 நவம்பர் மாதத்தில் தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகுவார் என்பது குறிப்பிடத்தக்கது.