ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பிலும், இயக்கத்திலும் தற்போது காஞ்சனா 4 திரைப்படம் உருவாகி வருகிறது. இது தவிர ஹண்டர், கால பைரவா போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் தயாரிப்பில் பென்ஸ் எனும் திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் ராகவா லாரன்ஸ். இதனை லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனமும், தி ரூட் நிறுவனமும், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் மாதவன், நிவின் பாலி, சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது.
You are ‘N’ot Ready for this.
That’s it. That’s the clue 😉#BenzCastReveal Tomorrow 💥@offl_Lawrence @GSquadOffl @PassionStudios_ @TheRoute @Dir_Lokesh @Jagadishbliss @Sudhans2017 @bakkiyaraj_k @SaiAbhyankkar @gouthamgdop @philoedit @jacki_art @actionanlarasu… pic.twitter.com/NzGprAfdTl
— TheRoute (@TheRoute) June 3, 2025

இந்நிலையில் படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை (ஜூன் 4) இந்த படத்தின் வில்லன் யார் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் படக்குழு ஒன்றினையும் கொடுத்துள்ளது. அதன்படி பென்ஸ் படத்தின் வில்லன் நிவின் பாலியாக இருக்கலாம் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.