ராகவா லாரன்ஸ் நடிக்கும் கால பைரவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
ராகவா லாரன்ஸ் கடைசியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ஹண்டர், பென்ஸ், அதிகாரம் போன்ற படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார் ராகவா லாரன்ஸ். மேலும் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தில் கேமியா ரோலில் நடிக்கிறார். அடுத்தது காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். இந்நிலையில் தான் ராகவா லாரன்ஸ் ரமேஷ் வர்மா பென்மெட்சா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். ராகவா லாரன்ஸின் 25 வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு கால பைரவா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய அளவில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தை ஏ ஸ்டுடியோஸ் LLP நிறுவனமும் ஓல்ட் மைன்ஸ் நிறுவனமும் நீலாத்ரி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. ராகவா லாரன்ஸ் இன்று (அக்டோபர் 29) தனது 48வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கால பைரவா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் ராகவா லாரன்ஸ் மாஸான லுக்கில் காணப்படுகிறார். மேலும் அந்த போஸ்டரை பார்க்கும்போது இந்த படம் ஆக்சன் நிறைந்த கதைக்களம் என்பது உறுதியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.