Homeசெய்திகள்சினிமாராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு..... அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் படப்பிடிப்பு!

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு….. அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் படப்பிடிப்பு!

-

- Advertisement -

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் மகேஷ்பாபு. இவரது நடிப்பில் கடைசியாக குண்டூர் காரம் எனும் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு..... அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் படப்பிடிப்பு!இருப்பினும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து மகேஷ்பாபு, பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ராஜமௌலி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. மேலும் இந்த படத்தில் மலையாள நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ் வில்லனாக நடிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. அடுத்ததாக இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு..... அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் படப்பிடிப்பு!ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதேசமயம் இந்த படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் ஐதராபாத் பகுதியில் நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ