சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் தான் கங்குவா. சூர்யாவின் 42வது படமாக உருவாக்கியிருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 26) சென்னை நேர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குனர் சிறுத்தை சிவா, சிவக்குமார், சூர்யா, கார்த்திக் சுப்பராஜ், கருணாஸ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஒவ்வொருவரும் கங்குவா பாடம் குறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து படக் குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அப்போது நடிகர் ரஜினி, கங்குவா படம் குறித்து பேசிய வீடியோ ஒன்று போட்டுக் காட்டப்பட்டுள்ளது. அதாவது ரஜினி, கூலி படப்பிடிப்பில் இருக்கும் காரணத்தால் கங்குவா இசை வெளியீட்டு விழாவில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே வீடியோ ஒன்றின் மூலம் கங்குவா படக் குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
Superstar #Rajinikanth couldn’t attend the #Kanguva Event due to #Coolie shoot.. He sent a Video byte wishing the team..🔥
— Laxmi Kanth (@iammoviebuff007) October 26, 2024
அந்த வீடியோவில், “அண்ணாத்த படம் பண்ணும் போதே சிவாவிடம், எனக்காக ஒரு பீரியாடிக் கதை எழுதுங்க. அப்படி பண்ணா ரொம்ப நல்லா இருக்கும். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணலாம் என்று சொன்னேன். அவரும் நிச்சயமாக பண்றேன் என்று சொன்னார். அதனால கங்குவா படம் நிச்சயமாக எனக்காக எழுதப்பட்ட கதைதான். இதை ஞானவேல் ராஜாவிடம் சொன்னதும் அவர் நல்லா இருக்கிறது என்று சொல்லி இருப்பார். அதனால் தான் இந்த படம் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கிறது. சூர்யா, நேர்மை, கண்ணியம், அறிவு ஆகிய அனைத்தும் உடையவர். அந்த மாதிரி ஒரு ஜென்டில்மேன் – ஐ பார்க்கவே முடியாது. அவருடைய அப்பாவின் குணம் அப்படியே இருக்கிறது. அவருக்கு அப்போதிலிருந்தே மத்த ஹீரோஸ் நினைச்சு கூட பார்க்க முடியாத வித்தியாசமான படங்களை பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது. கங்குவா படம் பிரம்மாண்ட வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.