ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவை சிறப்பாக கொண்டாடினர். ஆனால் அந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி பங்கேற்கவில்லை. ரஜினி, ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே இமயமலைக்கு சென்று இருந்தார். சில நாட்கள் கழித்து திரும்பிய அவர் உத்திரபிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியா உடன் ஜெயிலர் திரைப்படத்தை கண்டு ரசித்தார். இந்நிலையில் நேற்று ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 525 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ரஜினி தற்போது வரலாற்று சாதனை படைத்த ஜெயிலரின் வெற்றியை நெல்சன் திலிப் குமார், அனிருத், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.